Subscribe Us

header ads

கீழக்கரையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்ற‌ அப்துல் காலிக் திருமணம் நடைபெற்றது

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.அப்துல் காலிக் என்று பெயரை மாற்றம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.தாயின் மரணத்திற்கு பிறகு மனமாற்றம் ஏற்பட்டதாகவும், தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார்.

அவ‌ருக்கு கீழக்கரையை சேர்ந்த பெண்னை திருமணம் முடிக்க நிச்சயம் நடைபெற்றதாகவும் டிசம்பரில் துபாயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து யுவன் சங்கர் என்ற அப்துல் காலிக் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் யுவன் என்ற காலிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த சதக் நிசார் மகளான ஜப்ருன்னிஸாருக்கும் இன்று கீழக்கரையில் திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற்றது .

மணமகளின் உறவினருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பங்களாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமகளின் உறவினர்கள் ஜமாத் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

யுவனின் திருமணத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர்.







-AW-

Post a Comment

0 Comments