Subscribe Us

header ads

வீட்டை இழந்தார் பவித்தாரா வன்னியாராச்சி..?

-இர்ஸாத் ஜமால் (M.A) -

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற ஏழாவது ஜனாதிபதி  தேர்தல் முடிந்து பொது எதிர் அணியின் வேட்பாளர் மைத்திரி பால அவர்கள்  ஜனாதிபதியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். 

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்ட  அமைச்சர்கள் பல சூடான பந்தயங்களையும் சவால்களையும் இட்டு தேர்தல் களத்தில்  பரபரப்பினை ஏற்படுத்தினர். 

அந்தவகையில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகித்த அமைச்சர் பவித்தரா 
வன்னியாராச்சி மஹிந்தராஜபக்கஶ தோல்வியை தழுவுவாராயின் பெல்மதுல்லையில்  அமைந்துள்ள தனது வீட்டினை விட்பதற்கும், பந்தயம் கட்டுவதற்கும் தயார் என  தெரிவித்திருந்தார். 

அதே போன்று ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஆறுமுகம் 
தொண்டமான் அவர்கள், நுவரெலிய மாவட்டத்தில் அரசு தோல்வி அடையுமானால் தான்  நாட்டை விட்டு வெளியேறி அயல் நாடான இந்தியாவில் குடியேறுவேன் என சவால்  விட்டுருந்தார். 

வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுக்களின் பிரகாரம் ஐ.ம.சு.கூட்டமைப்பிற்கு 141,840  வாக்குகளும் எதிர் அணியினருக்கு 282,946 அளிக்கப்பட்டு எதிர் அணியினர்  நுவரெலிய மாவட்டத்தில் அமோக வெற்றியீட்டினர். அரசு படு தோல்வியை சந்தித்தது. 

தேர்தல் முடிவுகளின் படி தாங்கள் விடுத்த சவால்களை பவித்ராவும் தொன்டமானும் நிறைவேற்றுமிடத்து பவித்தரா தனது வீட்டினையும், தொன்டமான் தனது  குடியுருமையையும் இழக்கவேண்டி ஏற்படும். 

வீண் சவால்கள் வேலைக்கு ஆகாது என்பார்கள். 

Post a Comment

0 Comments