பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வசித்து வந்த கொழும்பு ஸ்டேன்மோர் சமுகத்தில் உள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ இல்லத்தை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் போதிய பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
சுதந்திரக் கட்சியினருக்கு மாத்திரமல்லது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் எவ்விதமான இடைஞ்சல்களும் ஏற்படுத்தப்படக் கூடாது என்ற இணக்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மகிந்த ராஜபக்ஷ, சந்திரிக்காவை தொடர்ந்தும் பழிவாங்கி வந்ததுடன் இரண்டாம் தர வாசஸ்தலத்தையே அவருக்கு வழங்கியிருந்தார்.


0 Comments