Subscribe Us

அரசியல் அதிருப்தியில் ஹிருணிக்கா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஹிருணிக்கா பிரேமச்சந்திர, ஜனாதிபதித் தேர்தலின் பின் அரசியல் ரீதியாக வெறுப்படைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக பதவிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படும் விதம் தொடர்பில் அவருக்கு எவ்விதமான தெளிவும் இல்லை என ஹிருணிக்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுத்தி வரும் அரசியல் ரீதியான நட்புறவு சம்பந்தமாக ஹிருணிக்கா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments