நாட்டில் நீதியுடன் தொடர்பான எந்தவொரு நிறுவனத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான சகல நடவடிக்கைகளையும் தயவுதாட்சன்யமின்றி நிறைவேற்றப் பின்நிற்கப் போவதில்லையென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று அமைச்சுப் பதவியை பொறுப்பேற்று விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சட்டம் ஒழுங்கை மீறும் எவரானாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதி மன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் முக்கியமான பணியாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


0 Comments