Subscribe Us

header ads

20வது சதத்தைப் பதிவு செய்தார் டில்ஷான்


இலங்கை அணி வீரர் திலஹரத்ன டில்ஷான் தனது 20வது சதத்தை சற்று முன்னர் பதிவு செய்துள்ளார். 

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்றது. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து சார்பில் லூக் ரொஞ்சி 170 ஓட்டங்களையும் கிராண்ட் எலியட் 104 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது விளாச, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த அந்த அணி 360 ஓட்டங்களை குவித்தது. 

இதனையடுத்து 361 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய டில்ஷான் சதமடித்து அசத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments