Subscribe Us

header ads

விவாதத்திற்கு நான் தயார் நீங்கள் தயாரா?? - மைத்திரி


டிசம்பர் மாதம் 22ம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு “நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நல்லாட்சி” தொடர்பான திறந்த விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஜனவரி இரண்டு முதல் ஐந்துக்குள் ஒரு தினத்தை அறிவிக்கும்படி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்விருவரையும் உத்தியோகபூர்வ கடிதம மூலம் அறிவுறுத்தி இருந்தது.

மஹிந்த ராஜபக்ஸவுடனான திறந்த விவாதத்திற்கு தாம் தயார் என எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை சட்டத்தரணிகள் சங்கதிற்கு  அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான திறந்த விவாதம் ஸ்கைப் அல்லது செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது


Post a Comment

0 Comments