Subscribe Us

header ads

மூக்கினால் தட்டச்சு செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்


இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூக்கினால் அதிவேகமாக தட்டச்சு (ரைப்) செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
23 வயதான மொஹம்மத் குர்ஷித் ஹுஸைன் எனும் இந்த இளைஞர் கணினி விசைப்பலகையில் தனது மூக்கின் மூலம் நிமிடத்துக்கு 103 சொற்களை தட்டச்சு செய்கிறார்.மூக்கினால் மாத்திரமல்ல கைகளாலும் வேகமாக தட்டச்சு செய்பவர் குர்ஷித் ஹுஸைன். இவர் ஏற்கெனவே ஆங்கில அரிச்சுவடியை தனது கைவிரல்களால் 3.5 விநாடிகளில் டைப் செய்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நான் முதல் தடவையாக கின்னஸ் சாதனை படைத்தவுடன் எனது பெற்றோர், குடும்பத்தினர், அயலவர்கள் ஆகியோரிடமிருந்து எனக்கு அதிக ஆதரவு கிடைத்தது.ஒரு கின்னஸ் சாதனையுடன் நிறுத்திவிடாமல் மீண்டும் சாதனைக்கு முயற்சிக்குமாறு அவர்கள் என்னை ஊக்குவித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 மூக்கினால் தட்டச்சு செய்யும்போது ஒரு கண்ணை மூடிக்கொள்வாராம் குர்ஷித் ஹுஸைன். இல்லாவிட்டால் விசைப்பலகையிலுள்ள எழுத்துக்களைக் கண்டறிவது கடினம் என்கிறார் அவர்.

Post a Comment

0 Comments