ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் இன்று உத்தியோகபூர்வமாக கடைமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற 7 ஆவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன 9 ஆம் திகதி பிற்பகல் இலங்கையின் 6 ஆவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


0 Comments