ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் பீ. எம். யு. டி பஸ்நாயக்க நேற்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சமய வழிபாடுகளைத் தொடர்ந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய செயலாளர் பஸ் நாயக்க பாதுகாப்பு அமைச்சினதும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங் கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
தான் நிர்வாக சேவையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எனக்கு அனுபவங்கள் உள்ளது. முப்படையி னர் மற்றும் பொலிஸ் திணைக் களத்தின் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக தமது கடமைகளை நிறைவேற்றுவதாகவும் புதிய கடமை கள் தொடர்பான நடவடிக்கைகளுக் காக சகலரினதும் ஒத்துழைப்பு மிக வும் முக்கியமானது என்றும் அவர் அதன் போது வேண்டுகோள் விடுத்தார்.


0 Comments