எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளும் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அடுத்து சீனாவுக்கான பயணத்தை மார்ச் மாதம் மேற்கொள்ளவுள்ளார்.
சீனாவுக்கான பயணத்திற்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இப்பணத்தின் பின்னரே மைத்திரிபால சிறீசேனா சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா செல்லும் மைத்திரிபால சிறிசேனா இரு நாடுகளுக்கிடையேயான நலிவுற்றிலிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல், மீனவர் விவாகாரம், இலங்கை அகதிகள் விவகாரம் போன்ற விடயங்கள் தொடர்பிலான பேச்சுகக்களில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ பணத்தை மேற்கொள்ளும் மைத்திரிபால சிறிசேனா அங்கு மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார். அப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் பேசப்படவுள்ளது.
0 Comments