சீனாவைச் சேர்ந்த சாரதி ஒருவர் மிக சிறிய இடத்தில் கார் ஒன்றை parking செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஹான் யூயி எனும் இச்சாரதி தனது காரை விட 3.15 அங்குலம் (8 சென்ரி மீற்றர்) மாத்திரம் பெரிதான இடத்தில் அக்காரை பார்க் செய்துள்ளார்.
சீனாவின் சோங்கிங் நகரில் நடைபெற்ற போட்டியொன்றின் போது அவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் காரை நிறுத்திய இடத்தில் அக்காருக்கு முன்னும் பின்னும் சுமார் ஒன்றரை அங்குல இடைவெளி மாத்திரமே இருந்துள்ளது.
இதற்குமுன் பிரிட்டனைச் சேர்ந்த அலிஸ்டர் மொஃபாட் என்பவர் 2013 ஆம் ஆண்டில் தனது காரை அக்காரை விட 3.4 அங்குலம் மாத்திரம் அதிக நீளமான இடத்தில் parking செய்தமையே சாதனையாக இருந்தது.
அச்சாதனையை முறியடிக்க முடியாது என அப்போது நிபுணர்கள் கருத்துத்
தெரிவித்திருந்தனர். ஆனால் ஹான் யூயி அச்சாதனையை 0.5 சென்ரிமீற்றரினால் முறியடித்துள்ளார்.
0 Comments