Subscribe Us

header ads

மனைவியும் கடவுளும் ஒன்று...

விஜய்: கடவுளும், மனைவியும் ஒன்று தெரியமா? 

அஜய்: அது எப்படிடா? 

விஜய்: இரண்டு பேருமே நாம் சொல்வதை எல்லாம் கேட்பார்கள். ஆனால் அவர்கள் இஷ்டப்படி தான் நடப்பார்கள். 

அஜய்: அவ்வ்வ்வ்வ்

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது. மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான்.

இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான்.

"சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?" அழுது கொண்டே சொன்னாள். "எனக்குத் தெரியும். சீன பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்" என்று...

Post a Comment

0 Comments