சீனாவில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை, சில்லறைகளாக கொடுத்து ஒருவர் வாங்கினார். அவற்றை ஒரு நாள் முழுவதும் எண்ணி முடிப்பதற்குள் கார் கம்பெனி ஊழியர்கள் திணறிவிட்டனர். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்தவர் வாங் ஜுபே (48). ஷீஜியாஜுவாங் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். வாங் ஜுபேவுக்கு புது கார் வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருக்கும் கார் ஷோரூமுக்கு நேற்று காலை 10 மணியளவில் வாங் ஜுபே வந்தார். இந்திய மதிப்பில் ரூ.6 லட்சம் விலையுள்ள லேட்டஸ்ட் மாடல் காரை செலக்ட் செய்தார்.
பின்னர் காருக்கான பணத்தை வாங் ஜுபே 4 மூட்டைகளில் எடுத்து வந்து கார் கம்பெனி ஊழியர்களிடம் கொடுத்தார். அவர்களும் அந்த மூட்டை முழுவதும் பணமாக இருக்கும் என்ற ஆவலில் கம்பெனி ஊழியர்கள் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 4 மூட்டைகளில், சீனாவின் யுவான் நாணயங்களாக இருந்தன. நேற்று மதியம் 12 மணியளவில் 6 ஊழியர்கள் நாணயங்களை எண்ணத் தொடங்கினர். மறுநாள் அதிகாலை வரை ஒரு நாள் முழுவதும் எண்ணி முடித்தனர்.
4 மூட்டைகளிலும் சுமார் 51,800 சீன யுவான் நாணயங்கள் (இந்திய ரூபாயில் ரூ.5.95 லட்சம்) இருந்தன. மீதித் தொகையை, 3 நாட்களுக்குள் கொடுத்து காரை எடுத்து செல்கிறேன் என்று வாங் ஜுபே கூலாக சொல்லி விட்டு வெளியேறினார். கார் கம்பெனி ஊழியர்கள், நம்மூர் நகைச்சுவை நடிகர் போல, ‘அண்ணே, இனிமே தாங்காதுண்ணே‘ என்று வாங் ஜுவேவை பார்த்து கொண்டிருந்தனர்.
0 Comments