கனணி பாகங்களை கொள்ளையிட்ட 15 வயதான மூன்று மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை (16) இவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் கடந்த 13ம் திகதி இரவு கடையொன்றின் பூட்டை உடைத்து நுழைந்து, இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு இலட்சத்து 11, 850 ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நிகவரெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments