Subscribe Us

தாமரைத் தடாக அரங்கின் பெயரிலிருந்து ராஜபக்ச பெயரை நீக்குமாறு கோரிக்கை

கொழும்பில் அமைந்துள்ள தாமரைத் தடாக அரங்கின் பெயரிலிருந்து ராஜபக்ச என்னும் பெயரை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில கலைஞர்களினால் இ;ந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ச அரங்கம் என தற்போது இந்த அரங்கிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் மஹிந்த ராஜபக்ச என்ற பெயரை நீக்குமாறு கலைஞர்கள், கலாச்சார அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்கவிடம் கோரியுள்ளனர்.

தாமரைத் தடாக தேசிய அரங்கம் என அரங்கிற்கு பெயர் சூட்டுமாறு கோரியுள்ளனர்.

இதேவேளை, குறித்த அரங்கம் அமைந்துள்ள வீதியின் பெயர் தாமரைத் தடாக வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த வீதிக்கு முன்னரைப் போன்றே ஆனந்த குமாரசுவாமி என்ற பெயரை சூட்டுமாறும் கலைஞர்கள் கோரியுள்ளனர்.

பிரபல நாடகக் கலைஞர் கே.பி. ஹேரத் தலைமையிலானவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments