தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 87 ம் பிரிவில் மிருக வதைச் சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக கூறி உள்ளார்.ஏற்கனவே மிருகவதைச் சட்டம் இலங்கையில் அமுலில் உள்ள போது இதனை ஏன் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் என்பது ஜாதிக ஹெல உறுமயவின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஒன்றா என்றே சிந்திக்கத் தூண்டுகிறது.இது பற்றிய விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சற்று அவதானமாக இருக்க வேண்டும்.
மீண்டும் தொகுதி வாரிப் பிரதிநிதித் துவத்தினைக் கொண்டு வர உள்ளதாக கூறி உள்ளார்கள்.தொகுதி வாரித் தேர்தல் முறைமையானது சிறு பான்மை இன மக்களின் பிரதிநிதித்துவத்தினை மிகவும் குறைப்பது மாத்திரமின்றி வேறு சில எதிர் விளைவுகளினையும் தோற்று விக்கக்கூடியது.இதன் மூலம் சிறு கட்சிகளின் செல்வாக்குகள் அதிகம் மக்களிடையே செல்வாக்குச் செலுத்துவது குறைக்கப்பட்டு தனி நபர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவர்.தனி நபர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது சிறு பான்மையினரின் உரிமைகள் வென்றெடுத்தல் சம்பந்தமான விடயங்களுக்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறும் அளவு வாக்கு இல்லாத இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் பெரும் பான்மை இனத்தவர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.இத் தேர்தலில் எவ்வாறு சிறு பான்மையினர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மிளிந்தார்களோ அதனைப் போன்று குறித்த உறுப்பினர் தெரிவிலும் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வர்.இதன் காரணமாக அழகிய இன சக வாழ்விற்கு இது வழி கோலும் என்பதனையும் மறுக்க முடியாது.முற்று முழுதாக தொகுதி வாரித் தேர்தல் முறைமையினைக் கொண்டு வராது குறித்த வீத உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் சிறு பான்மை இனப் பிரதிநிதித்துவங்களை ஈடு செய்வதற்கான ஒரு வாய்ப்பு உள்ள போதும் பேரினக் கட்சிகள் சிறு பான்மை பிரதிநிதித்துவ விடயத்தில் எந்தளவு அக்கரை காட்டும் என்பதனை சற்று சிந்திக்க வேண்டி உள்ளது.அவ்வாறு பேரினக் கட்சிகளினால் பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட்டாலும் அது தங்களுக்குச் சார்பானவர்களுக்கே வழங்கப்படும் என்பதால் அவ்வாறு வரும் பிரதிநிதித்துவங்கள் மக்கள் தேர்ந்தெடுப்பது போன்று ஆரோக்கியமானதாக அமையவும் போவதில்லை.இவ்வாறு பொது வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம் சிறு தெளிவின்மையுடன் காணப்பட முஸ்லிம் அரசியற் கட்சிகள் ஆரம்பத்தில் பொது வேட்பாளருடன் கைகோர்க்காமையும் பிரதான காரணங்களில் ஒன்று எனலாம்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன் சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங் கையில் இனவாதக்கருத்துக்களைத் தூவியவர்கள் வரிசையில் இவரும் உள்ளமை சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு உருதிப்படுத்தப்படுமா என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கிறது.பாராளுமன்ற த்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக தற்கால அரசு வாக்குறுதி அளித்துள்ளது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கபட்டால் இலங்கை பூராகவும் வாழ்கின்ற மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியை விட ஒரு தொகுதியில் அல்லது மாவட்டத்தில் வெற்றி பெறுகின்ற ஒருவரான பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படவுள்ள பிரதமர் அதிக அதிகாரத்தினை தன் வசம் வைத்திருப்பது ஏற்கத்தகுந்தது அல்ல.
மேலும்,தற்போது அமைக்கபட்டுள்ள இடைக்கால அரசில் விரும்பியவர்கள் விரும்பிய அமைச்சினைப் பெறும் அளவு செல்வாக்குச் செலுத்துவதும் நாட்டின் எதிர்கால நலனிற்கு உகந்தது அல்ல.நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுமாக இருந்தால் ஜனாதிபதி எவ் விதமான அமைச்சுப் பதவிகளினை ஏற்கமாட்டார்.பாதுகாப்பு அமைச்சு போன்ற முக்கிய அமைச்சுக்கள் இலங்கை பூராகவும் வாழ்கின்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஜனாதிபதியிடம் இருப்பதே பொருத்தமானதாகும்.எனினும்,ந ாட்டில் நீதி,பாதுகாப்பு போன்றவற்றில் நிறைவேற்று அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக சுயாதீனத்தை இழக்கும் தன்மைகள் நீக்கப்பட வேண்டும் என்பதனை மறுக்க முடியாது.பாராளுமன்றத்திலும ் நிர்வாகத்துறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.பொது வேட்பாளரும் முற்று முழுதாக நிறைவேற்று அதிகாரத்தினை நீக்க மாட்டார் என்பதுடன் வெளி நாட்டுத் தொடர்பு,நாட்டினதும் முப்படைகளினதும் தலைவராகவும் ஜனாதிபதி இருப்பார் என்றே நம்பப்டுகிறது.அமைச்சுக்களி ன் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறி இருந்த போதும் அமைச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட வில்லை.
துறையோர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 Comments