Subscribe Us

header ads

அ.இ.ம.கா இன் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் மு.கா இல் இணைவு

கல்குடாப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது மு.கா ஊடாக மாத்திரமே பாதுகாக்க முடியும் என அறிந்த கல்குடா மக்களின் ஆலோசனையின் பேரில் ஓட்டமாவடிப் பிரதேச சபை அ.இ.ம.கா உறுப்பினர்களான ஏ.எல்.ஜூனைட் நளிமி,எஸ்.ஏ.எம்.அன்வர் ஆசிரியர்,எஸ்.ஐ.முஹாஜிரின் ஆசிரியர் ஆகியோர் கல்குடா பாராளுமன்றப் பிரதிநிதிதுவத்தினைப் பாதுகாக்க மு.கா உடன் இணைந்து  செயற்பட முடிவு செய்துள்ளார்கள்.

இவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க ஐ.தே.க முயற்சி செய்து வருவதாககவும் நம்பகரமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.கல்குடா சார்பாக மு.கா இல் விரிவுரையாளர் நாபீர்,கணக்காளர் ரியால்,முஸ்தபா டொக்டர் ஆகியோரரில் ஒருவரை களமிறக்க முயற்சித்து வருவதாகவும் இன்னும் சில நாட்களில் இது பற்றி மு.கா தலைவரிடம் பேச உள்ளதாகவும் அறிய முடிகிறது.மு.கா தவிசாளர் பசீர் சேகு தாவூத் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் குதிக்க மாட்டார் என நம்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.இது எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

Post a Comment

0 Comments