Subscribe Us

header ads

முஸ்லிம்களும் ஜனாதிபதி தேர்தலும்

இலங்கை மக்களாகிய நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஒன்றை எதிர் நோக்கி  இருக்கின்றோம். இந்த தேர்தல் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்க இருக்கின்றது.


குறிப்பாக பார்க்கும் போது இந்த தேர்தலினை இலங்கை மக்கள் மட்டுமல்ல, உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தேர்தல் குறித்து அண்மையில் அஷ்-ஷேய்க் யூசுப் முப்தி, இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கிய அறிவுரையை தழுவி இங்கு எழுதுகிறேன்.

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களே, 

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள, நாங்கள் இந்த நாட்டின் விருந்தாளிகளல்ல என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் இந்த நாட்டின் பிரஜைகள். நாங்கள் இந்த நாட்டில் பிறந்திருக்கின்றோம், எமக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் இருக்கின்றது. எமக்கு இந்த நாட்டின் மேல் கடமைகளும் இருக்கின்றது.

வெறுமனே எமது உரிமைகளை பற்றி மாத்திரம் பேசாது, எமது கடமைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். வர இருக்கின்ற தேர்தலில் எம் மீதுள்ள கடமைகள் என்ன? நாம் முதலில் விளங்க வேண்டிய விடயம் என்னவென்றால், நாம் இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்றோம். பெரும்பான்மை முஸ்லிம் நாட்டில் வாழ்வதை போல் சிந்திக்க முடியாது.

ஏனெனில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளின் நிலைப்பாடுகளை இங்கு திணிக்கவோ, எதிர்பார்க்கவோ முடியாது. அது பொருத்தமற்ற செயற்பாடு. பிக்ஹுல் அகல்லிய்ய (சிறுபான்மையாக முஸ்லிமகள் வாழும் நாட்டில் கடைபிடிக்க வேண்டிய சட்டம்-பிக்ஹ்) என்ற ஒரு சட்டக்கலை இருக்கின்றது வர இருக்கின்ற தேர்தலில் வாக்களிப்பது, எமது வாக்குரிமையை பயன்படுத்துவது எமது உரிமை  மட்டுமல்ல, அது எமது கடமையும் கூட என்பதனை மறந்து விடாதீர்கள்.

இதனால் கட்டாயம் வாக்களித்துத் தான் ஆக வேண்டும். முஸ்லிம்களுடைய வாக்கு குறிப்பாக பெண்களுடைய வாக்கு, இளைஞர்களுடைய வாக்கு எங்கெல்லாம் பதிவாகி இருக்கிறதோ, அங்கு போய் தமது வாக்கை அளிக்கவேண்டும். அவர்களுடைய வாக்கை முறையாக அளித்துவிட்டு வருவது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

ஒரு வாக்கிணூடாக ஒரு சமூகத்தின் தலையெழுத்து மாற்றப்படலாம். ஒரு வாக்கிணூடாக ஒரு சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையாலாம். ஒரு வாக்கிணூடாக ஒரு சமூகத்தின் எதிரகாலத்தை அல்லாஹ் மாற்றி அமைக்க முடியும். எனவே மிக முக்கியமான ஒரு விடயம், நம்பிக்கை இறைவனிடம் இருந்தாலும் எங்களுடை முயற்ச்சியாக எங்களுடைய வாக்களிப்பு அமைய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது இஸ்லாத்திற்கு முரணான செயலாக யாரும் கருதக் கூடாது.

வாக்களிப்பின் போது பொருத்தமானவருக்கு, உங்களுக்கு விருப்பமானவருக்கு உங்கள் வாக்கை அளிக்கலாம். ஆனால் உங்கள் வாக்கு முறையாக அளிக்கப் படவேண்டும். இலங்கை முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே உங்கள் வாக்கை தவறாது முறையாக அளித்து எமது உரிமையையும் கடமையையும் நிலை நாட்டுவோம்.

அல்லாஹ் சிறந்த முடிவையும், முஸ்லிம்களுக்கு சாதகமான ஆட்சியையும், சிறந்த ஆட்சியையும் இந்த நாட்டிற்கு தந்தருள்வானாக.

ஆமீன்.

-சப்ரான் பின் சலீம்-
-விடியல்-

Post a Comment

0 Comments