சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் "முல்பிட்டுவ" என்ற பத்திரிகை கண்ணோட்ட நிகழ்ச்சியில் இருந்து முன்னணி செய்தியாளரும் லேக் ஹவுஸ் நிறுவன முன்னாள் தலைவருமான பந்துல பத்மகுமார நீக்கப்பட்டமைக்கும் புதிய அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
புதிய அரசாங்கத்துக்கு எதிரான வகையில் பந்துல பத்மகுமார தமது நிகழ்ச்சியை நடத்தி சென்றமை காரணமாக சுவர்ணவாஹினி நிர்வாகவே அவரை நீக்கியது என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடு காரணமாகவே பந்துல நீக்கப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் பந்துல புதிய அரசாங்கத்துக்கு எதிராக நிகழ்ச்சியை நடத்தினாலும் அது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ரணில் விக்கிரமசிங்க, சுவர்ணவாஹினி தலைவர் ஜீவக எதிரிசிங்கவிடம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது சுவர்ணவாஹினி நிர்வாகத்தின் விருப்பம் என்றும் ரணில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பந்துலவை விலக்கியமைக்கு காரணத்தை தேடிய சுவர்ணவாஹினி நிர்வாகம், அரசியல் அழுத்தமே காரணம் என்று கதையை பரப்பி விட்டதாக புதிய அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.


0 Comments