முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் நளின்.டி.திஸ்ஸ தெரிவித்தார்.
கடற்படை அதிகாரியாகவிருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய முறைப்பாடொன்று கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


0 Comments