Subscribe Us

header ads

ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக 2000 முறைப்­பா­டுகள் பதிவு


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , கோத்­த­பாய ராஜபக்ஷ , யோசித்த ராஜபக்ஷ , சிரந்தி ராஜபக்ஷ உள்­ளிட்ட ராஜபக்ஷ குடும்­பத்­தி­ன­ரி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் ஊழல் தொடர்­பி­லான முறைப்­பா­டுகள் 2000 பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் 30 முறை­யீ­டு­களே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்­கு­ழுவில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.
தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்­பாட்­டாளர் வசந்த சம­ர­சிங்க இதனை தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
முன்­னைய அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அமைச்­சர்கள் தொடர்­பி­லான மோசடி குறித்த முறைப்­பா­டு­களும் எமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.
இதற்­க­மைய மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக 150 முறைப்­பா­டு­களும் சஜித்வாஸ் குண­வர்­தன எம்­.பி.க்கு எதி­ராக 200 முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இவற்றில் 30 முறைப்­பா­டுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

0 Comments