Subscribe Us

header ads

நான் சொன்னதை ஊடகங்கள் மாறி விளங்கி வெளியிட்டன – ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்பாக தன்னுடன் அல்லது அமைச்சரவையில் எதனையும் பேசாது அமைதியாக இருந்த உறுப்பினர்கள் தற்போது எதிரணியின் மேடையில் இருந்து கொண்டு தன் மீது குற்றம் சுமத்துவது அநீதியானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் வைத்து ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த போதே ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் முகாம் தொடர்பில் ஊடக பிரதானிகள் ஜனாதிபதியிடம் வினவினர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தனக்கு தெரிந்த வகையில், ரணில் விக்ரமசிங்க வலுவான தலைவர் எனக் கூற முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்முறை தன்னுடன் போட்டிக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை ஃபைல்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடக பிரதானிகள் ஜனாதிபதியிடம் வினவியபோது, அமைச்சர்களால் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் ஃபைல்கள் இருக்கின்றன. நான் அந்த ஃபைல்கள் குறித்தே தெரிவித்திருந்தேன்.
ஆனால், நான் சொன்னதை ஊடகங்கள் மாறி விளங்கி வெளியிட்டன. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இதைப்பற்றி விசாரித்திருந்தால் நான் விளக்கம் கொடுத்திருந்திருப்பேன்’ என ஜனாதிபதி மேலும் கூறினார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர , ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
HE-Media_Discusion-1HE-Media_Discusion-2

Post a Comment

0 Comments