Subscribe Us

header ads

றிசாத் பதியுதீன் ஹீரோவா..? சீரோவா..??

(தினகரன் வாரமஞ்சரி)


பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோதப் போக்கினை மஹிந்த அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாம். அதனால்தான் தான் அரசிலிருந்து வெளியேறுகிறாராம். நல்லவேளை தேர்தல் வந்ததால் அமைச்சர் றிசாத் இப்போதாவது இதனைக் கண்டுபிடித்தார். இல்லாவிட்டால் ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னமும் இரண்டு வருடங்களில் முடிந்து அப்போது தேர்தல் வரும்போதுதான் கண்டு பிடித்திருப்பார். என்னடா உலகம் இது? இதனை நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதனையே இவர் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக கூறி அதிரடியாக வெளியேறியிருந்தால் இவர் ஹீரோ. ஆனால் இப்போது அவர் அஸ்வர் அவர்கள் கூறியதுபோல சீரோவாகியுள்ளாராம். என்னதான் இருந்தாலும் மைத்திரி ஆட்சி அமைப்பார் அதில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற இவரைப் போன்றவர்களது கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை கட்சி தாவுவோர் விரைவில் உணர்வர். எப்படியும் இவர்கள் எல்லோருமே இக்கரைக்கு மீண்டும் வந்தே ஆக வேண்டும். அப்போது எங்கே போய் முகத்தை வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை. அரசியலில் இதுவெல்லாம் சகஜம்தானே என்று கூறிக்கொள்வார்களோ?

Post a Comment

1 Comments

  1. போது பாலா சென பள்ளி மேட்டர் ஹலால் அபாயா எல்லாம் வந்து பொய் விட்ட மேட்டர் இதற்கெல்லாம் அரசுக்கு பாடம் புகட்ட வேணும்னு நினைத்தால் முஸ்லிம் தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை என்று உறுதிப்படுத்த அந்த நேரமே வெளியே வரனும் சரி அதுக்குதான் இடுப்பில் சீவன் இல்லைன்னு சொல்லுங்க உங்க அமச்சிக்கி வந்து உங்களுக்கு ஆட்டம் காட்டிட்டு போன போது பாலா சேனைக்கு எதிராக என்ன புடுங்கினீங்க அந்த நேரம் அரசை விட்டு வெளியே வண்திக்கனுமே ஆனால் வரலேயே இப்போ எதுக்கு வரனும்
    அடுத்த முறை ஹுனைஸ் யானைல போட்டி போட்டால் உங்க வெத்திலை என்ன கெதி சோ உங்கா பதவிய தக்க வைக்க தாவல் ஆனால் உலகத்துக்கு சமூக அக்கரைனு படம்

    ReplyDelete