Subscribe Us

header ads

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை அரசு பாராளுமன்றம் அழைப்பது ஏன்..?

2012 ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அரசு வெற்றி வாகை சூடினால் தானே முதலமைச்சர் என்ற கோசத்தில் கிழக்கு மாகாண சபையில் களமிறங்கி மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி இற்கு முதலமைச்சர் ஆகுவதற்கான அத்தனை தகுதிகளும் இருந்த போதும் மு.கா அங்கீகாரம் இன்மையால் முதலமைச்சர் பதவி பறி போனது.மு.கா தலையீடு இல்லாவிட்டாலும் இவருக்கு முதலமைச்சர் பதவி  கிடைத்திருக்குமா?என்பது கேள்விக் குறியே! இதற்கு முன்னைய மாகாண சபைத் தேர்தலிலும் நியாயப் படி அ.இ.ம.கா  கட்சிற்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவி பறி போய் இருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும்,இம் முறையாவது  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திளைத்திருந்த அ.இ.ம.கா  இன் நினைப்பின் மீது மு.கா தான் மண்ணை அள்ளிப் போட்டது.

அ.இ.ம.கா ஆனது 3 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்ட ஒரு கட்சி.அக் கட்சியில் இலிருந்து அண்மையில் கட்சித் தாவல் ஒன்று இடம் பெற்று ஒரு எம்.பி வெம்பிப் போனது யாவரும் அறிந்ததே.அடுத்த உறுப்பினர் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.அ.இ.ம.கா இனைப் பொறுத்த மட்டில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினை  தனது கட்சி என பெயரளவில் தான் கூற முடியும். அ.இ.ம.கா இனது அட்டவனைக்கமைய இவர் இயங்குகிறாரா?என்பது கேள்விக் குறியே.தற்போதைய நிலைமையில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற அமீர் அலியை பாராளுமன்றம் அனுப்புவதே தகுந்த ஒரு முடிவாக அமையும்.

ஜனாதிபதித் தேர்தலில் அரசிற்கான மு.கா ஆதரவு கேள்விக் குறியாகி உள்ள இவ் வேளை அரசு அ.இ.ம.கா இனது சிறு சிறு கோரிக்கைகளுக்காவது இணங்காவிட்டால் எவ்வாறு?முதலமைச்சர் பதவியினைக் கேட்க முடியுமா?என்றால் அது மு.கா இனை மேலும் மேலும்  சீண்டிப் பார்ப்பதாக அமையும் அதே கனம் கிழக்கு மாகாண சபையின் தொடர்ச்சி கேள்விக்குறியாகி  உள்ள போது அதனைக் கேட்டுப் பெற்று வம்பை விலை கொடுத்து வாங்குவதும் அறிவுடமையுமல்ல.

அ.இ.ம.கா அரசை ஆதரித்தால் அது நிச்சயம் அ.இ.ம.கா இணைப் பாதிக்கும்.அதனை எதிர் கொள்ளும் வாக்கு வலிமை தலைவருக்கு உண்டு எனக் கூறலாம்.மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு உண்டா? என்பது யாவரும் அறிந்ததே!இதனை சரிக் கட்ட வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றப் பதவி தான் பொருத்தமானது.அதிலும்,அமைச்சுப் பதவியே சாலச் சிறப்பு.கிழக்கு மாகாணத்தில் அ.இ.ம.கா இனது  தடம் பதித்தலுக்கு சிறு ஏணியாக இருப்பவர் அமீர் அலி தான்.இவரையும் அ.இ.ம.கா தவற விட்டால் எல்லாம் அம்பேல் தான்.இவரும் சில காலங்கள் முன் மாறும் சைகைகளை காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.எனவே,இவரையும் பதவி கொண்டு அலங்கரிக்க வேண்டிய தேவை அ.இ.ம.கா இற்கு உண்டு.

எது?எவ்வாறு?இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என நம்பப்படும் இவ் வேளையில் எத்தனை நாட்களுக்கு பாராளுமன்றப் பதவி? என்ற வினாவினை எழுப்பும் போது இம் முறை அரசினது பிரச்சாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகவும் சவாலானது.இதனை வெற்றிகரமாக கிழக்கில் முகம் கொடுக்க அமீர் அலியினை பதவி கொண்டு அரசு அலங்கரித்து உரிய பாது காப்பு வழங்கி பாவிக்கப் போகிறது என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

இலங்கை.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments