ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கான தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க, ஜப்பானுக்கான தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னகொட, சிட்னியில் உள்ள தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர, கன்பராவில் உள்ள துணைத் தூதுவர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, ரஸ்யாவுக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது பற்றிய விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிடாமல் மறைத்து வருகிறது.
வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற இராஜதந்திரிகளில் மேலும் ஒருதொகுதியினர் விரைவில் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளனர்.
அதேவேளை. ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் விடுமுறையில் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments