பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து புத்தளம் போல்ஸ்வீதி மஸ்ஜிதுல் ஹூதா பள்ளி மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது அணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க,ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன்,ஜனநயாக தேசிய முன்னணி தலைவர் சரத் பொன்சேகா,ஜக்கிய தேசிய கட்சி உப தலைவரும்,கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருநாயக்க,முன்னால் அமைச்சர் ராஜித சேனாரதன் உட்பட எமது புத்தளம் ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் புத்தளம் தொகுதி ஜக்கிய தேசிய அமைப்பாளரும்,முன்னால் நகர சபை தலைவருமான எம்.என்.நஸ்மி தலைமையிலான ஆதரவாளர்கள் புத்தளம் நகரில் ஊர்வலமாக வருவதை படத்தில் காணலாம்.
படங்கள்-இர்ஷாத் றஹ்மத்துல்லா



0 Comments