பௌத்த பிக்குகளுக்கு அரசாங்கம் விநியோகிக்கவிருந்த ஒரு கோடி ரூபாவுக்கு மேலான காவி உடைகளை தேர்தல் ஆணையாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து விகாரைகளிலும் இருக்கும் பௌத்த பிக்குகளுக்கு எதிர்வரும் 4ஆம் திகதி தேர்தல் பரிசாக காவி உடைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இந்தக் காவி உடை வழங்கும் இரகசியத் திட்டம் வெளிவந்ததைத் தொடர்ந்து தேர்தல் சட்டத்திற்கு முரண் எனக் கூறி, தேர்தல் ஆணையாளர் மேற்படி விநியோகத்தை தடை செய்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments