-Mohamed Irfan-
நீ தியாகத்தின் மொழி பெயர்ப்பு
நானும்
உன் மீது காதலில் விழுந்தேன்
அத்தனை சொகுசையும் கறை படிந்த ஆடையென
கழற்றி வீசிய கணப்பொழுதில்
தீர்ப்பு வருமுன்னே தீர்ப்பை எழுதியவர்கள்
வெட்கித்து தலை குனிந்தனர்
உன்னை இகழ்ந்த இயந்திரங்கள்
அதிர்ச்சியில் உறைந்து போனது
இதுவல்லவா தியாகம்
இதுவும் தியாகத்தின் மொழி பெயர்ப்பே
ஏகத்துவம் உன்
இருதயத்தை அழகு படுத்தியதாயின்
அல்லாஹ் பொருந்தி கொள்வானாக
தர்மத்திற்காய் துயரத்தை ஏற்க துணிந்தாய்
இறப்பு நேரினும் சரித்திர விதையாய்
புதையுண்டு போவேனென்று உறுதி பூண்டாய்
தோல்வியும் வெற்றியும்
அல்லாஹ்வின் வெளிப்பாடு என்றாய்
விடியலை நோக்கிய பயணத்தில்
நீ முதல் ஒளியானாய்
உன் தேசத்து பாதங்கள் ஆயிரமாயிரமாய்
பின் தொடர உறுதி கொண்டது.


0 Comments