Subscribe Us

அமீர் அலி என்ற தனிமனிதன் மீது ஏன் இந்த காழ்ப்புனர்ச்சி?

-Safwan Basheer -

முன்னால் அமைச்சர் அமீர் அலி அரசோடு  இணையப்போவதாக அறிவித்தது முதல் அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் அவர் அரசை விட்டு வெளியாகிய பிறகும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விட்டு வந்திருக்க வேண்டும் என்று விமர்சிக்கிறார்கள்.

இந்த விமர்சனம் வெறும் அமீர் அலி என்ற தனிமனிதன் மீதான காழ்புனர்ச்சியைக் காட்டும் விமர்சனங்களாகவே நான் கருதுகின்றேன்.

2010 பொதுத்தேர்தலில் அமீர் அலி தோற்றாலும் அவருக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்திருந்த போதும் கடந்த நான்கு வருடங்களாக அமீர் அலியையும் அவரது கட்சியையும் அரசு ஏமாற்றியே வந்தது.

மஹிந்தவின் வெற்றிக்கி மிகவும் கஷ்டப்பட்ட அமீரலியை விட்டு விட்டு அஸ்வருக்கு அந்தப்பதவியை வழங்கி அழகு பார்த்தார்கள்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மஹிந்த அரசை  பலவீனப்படுத்தவேண்டும் ஆட்சியை மாற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இத்தருணத்தில் மஹிந்தவின் தேசியப்பட்டியளையும் எடுத்துக்கொண்டு எதிரணிக்கு  சென்ற அமீரலியை விமர்சிப்பதற்குப் பதிலாக சமூகம் அவருக்கு நன்றிதான் சொல்லவேண்டும்

அமீர் அலி பிரதி அமைச்சுப்பதவியையும் எடுத்துக் கொண்டு அரசுக்கு ஆதரவாக இருந்தால் சமூகம் அவரை காரித்துப்பும்.

அவருக்கு வரவேண்டிய தேசியப்பட்டியல்  பதவியை எடுத்துக்கொண்டு சமூகத்துக்காக சுயநலமில்லாத ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறார்.

திஸ்ஸ அத்தநாயகவை தேசியப்பட்டியளோடு வாங்கும்போது மஹிந்த அரசுக்கு பிரச்சினையில்லை. ஆனால் அவர்களது தேசியப்பட்டியல் போகும்போது
வலிக்கிறது.

ஒங்களுக்கு வந்த இரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னி.நல்லா இருக்குடா உங்க அரசியல் தர்மம்.

Post a Comment

0 Comments