Subscribe Us

500க்கும் மேற்பட்ட இலங்கையின் பிரபல்ய கம்பனிகளின் தலைவர்கள் பிரநிதிகளை சந்தித்த மைத்தி & ரணில்.(PHOTOS)

-அஸ்ரப் ஏ சமத்-


கொழும்பு சினமன் லேக் ட்ரைவ் ஹோட்டலில் கொழும்பில் உள்ள பிரபல்யமான கம்பனிகளின் தலைவர்கள் மற்றும் பிரநிதிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வுவொன்று இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் நான்கு இனங்களையும சார்ந்த வர்த்தகச் சமுகத்தினர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவையும் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவையும் அழைத்து உரையாடினார்கள். இதில் எதிரணியின் தலைவர்கள் ஜ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க இந்த நூறுநாள் திட்டத்தில நான் மஹிந்த ராஜபக்சவை ஒருபோதும் எதிர்கட்சித் தலைவராக அவரை அலங்கரிக்க விரும்பவில்லை. அவருக்கு பிரதிப்பிரதமராக பதவிவகிப்பதற்கும் வழிவகை செய்வதாகக் கூறினார்.

100 நாள் என்றால் 100 நாள் தான. ஒருபோதும் 200 வது நாளைக்கு நீட்டிக் கொண்டு செல்வதில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு யாவருக்கும் சமன் என்ற நிலையில் நிறுத்தப்படும்.

ஜனாதிபதியை மகிந்தவை ஒருபோதும் மிண்சாரக் கதிரைக் கொண்டு செல்லவோ சர்வதேச நீதிமன்றத்திற்கொண்டு செல்லாமால் நாங்கள் பாதுகாப்போம். (ஜோக் – அவர் ஏற்கனவே ஒவ்வொரு மிண்சாரக் கம்பிகளில் தூக்கப்பட்டு இருந்துகொண்டுதான் இருக்கின்றார்) ஹம்பாந்தோட்டை ஏயார் போட், துறைமுக பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை அமைப்போம்.

அதற்காக ஜரோப்பிய நாடுகளின் தலைமைத்துவடன் ஜு.எஸ்.பியை பெற்றுக்கொள்வோம். இந்த அரசாங்கம் பெற்றுள்ள குறுகிய காலக் கடண்களை நெடுங்கால கடணாக மாற்றுவதற்கு பேசுவோம்.

இந்த நாட்டில் அடிப்படை வசதிகளை உறுவாக்கினாலும் உற்பத்திகள், பெக்டறிகள், தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவில்லை. விவசாயம், மற்றும் ஜ.ரீ. டெக்னீசியன், முகாமைத்துவம், போன்ற சமுதாயத்தை நாம் உறுவாக்க வேண்டும் கம்பணிகள் இருந்தாலும் அதனை அவர்கள் வெற்றிகரமாக நடாத்துவதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்தல் வேண்டும்.

இந்த அரசாங்கம் கல்விக்கு 1.6 வீதத்தில் செலவுசெய்கின்றது. வர்த்தகத்தில் எமது நாடு 65வது இடத்தில் உள்ளது. ஆனால் 66வது இடத்தில் ருவண்டா ஆபிரிக்க நாடு உள்ளது. இந்தியா எமது அருகில் உள்ள நாடு அந்த நாட்டுடன் எமது பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் சார்க் நாடுகளின் ஒரு மையமாக இலங்கையை நாம் வளப்படுத்தமுடியும்.

மைத்திரிபாலவின் 100 நாற்கள் திட்டத்தின் தெளிவு, எதிர்காலத்தில் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தற்போதைய மற்றும் ஜரோப்பிய நாடுகளின் ஜி.எஸ.பி, மற்றும் மீண் ஏற்றுமதி, பால்பற்னைகள், விவசாயம் 10 இலட்சம் வேலைத்திட்டம் மற்றும் பல்வேறு சந்தேகங்களை வர்த்தக சமுகம் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர்.








Post a Comment

0 Comments