Subscribe Us

header ads

பூனைக்கு மணி கட்டுவது யார்!!


கடந்த காலங்களில் மிகவும் சூடு பிடித்துள்ள தேர்தல் காலமானது இலங்கையின் பல பாகங்களிலும் மிகவும் உன்னிப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இனி மேலும் நாம் தமிழர் ஒருவர் பொது வேட்ட்பளர் என்ற விபரீத ஆசைக்கு காலம் தாழ்ந்து விட்டது. அதை அவர்களாலும் செய்யமுடியாமல் போய் விட்டது.

பொது வேட்ட்பளர் நிறுத்துமிடத்து தங்களுக்கு உள்ள சர்வதேச ஆதரவினையும் தாங்கள் இழந்து விடக் கோலும் என்ற ஐயத்தின் காரணமாக அவை அனைத்தும் கைவிடப்பட்டு விட்டன.

இன்றைய காலகட்டத்தில் 2 கொடியவனுக்கும் நடக்கும் இந்த யுத்தத்தில் ஒரு கொடியவன் வெற்றி பெறுவான் என்பது யாவரும் அறிந்த உண்மை.

ஆனால் எமது தலைமைகள் சற்று ஆழமாக சிந்திக்க தொடக்கி இருப்பதாக தற்போது வரும் அறிக்கைகளின் மூலம் புலனாகின்றது.

கடந்த காலங்களில் இருந்து இன்று வரைக்கும் இவர்களின் இந்த அமைதி காக்கும் தன்மையில் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை உருவாகியுள்ளதா?

என்ன கேட்டாலும் மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள், மக்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழ் மொழியை பேசும் தமிழர்களுக்கு என்று ஒரு தலைமை தேவையா என்ற கேள்வியும் உருவாகின்றது.

இன்று பாருங்கள் இலங்கையில் உள்ள தமிழ் தலைமைகளின் நிலைப்பாட்டை எடுத்துப் பார்த்தால் அவர்களுக்கு ஒற்றுமை இன்மையை வெளிப்படுத்தும் விதமான சம்பவங்கள் தான் அதிகமாக உள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஒரு கருத்து, இதர கட்ட்சிகள் ஒரு கருத்து அது போன்று முஸ்லிம் தலைமைகளும் இன்று அதே கோணத்தில் பிளவடைந்துள்ளது.

இவர்கள் ஒற்றுமை கரத்தால் தான் மக்கள் ஒரு தெளிவான முடிவினை எடுக்க முடியும். அரசியல் வாதிகளான இவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் மக்கள் மட்டும் என்ன செய்வார்கள்.

குறிப்பாக உண்மையான நிலையை சொல்லப் போனால் இலங்கையில் உள்ள மக்கள் எப்படி இந்த தேர்தலில் வாக்களிப்பது என்ற பாரிய கேள்விகளும் உருவாகியுள்ளது.

இதை கூட இன்னும் மக்கள் புரிந்து கொள்ளாத நிலையில் மக்கள் சிறந்த முடிவு எடுப்பார்கள் என்ற வெற்று பேச்சு மட்டுமே இவர்களுக்கு மிஞ்சி உள்ளது.

உண்மையான நிலையை மக்களுக்கு எடுத்து சொல்லும் உரிமை எமது தமிழ் முஸ்லிம் தலைமைகளிடமே உள்ளது

மற்றைய தேர்தல் காலங்களில் தமிழர் பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து பல தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளர்கள. ஆனால் இந்த தேர்தலை பொறுத்த வரையில் இவர்களின் இந்த அமைதி காக்கும் தன்மை எதற்காக?

இரண்டு தலைமைகளும் சாதாரண மக்களை அரசிடம் அடகு வைத்துவிட்டதா என்ற கேள்வி தற்போது உருவாகியுள்ளது.

சர்வதேசம் ஒன்றை நன்றாக புரிந்து வைத்துள்ளது, சிறுபான்மை மக்களுக்கு இலங்கை அரசியல் யாப்பில் உள்ள அனைத்தும் எழுத்து மூலமே உள்ளது, நடைமுறையில் இல்லை என்பதை. ஆகவே எம்மால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடியாதவர்கள் ஆகவும் இருக்கின்றோம்.

இந்த தேர்தலை புறக்கணித்தால் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் விலகிச் சென்று விடுவோமோ என்ற ஐயமும் இருக்கின்றது.

அதே சமயம் இன்று இரண்டு பேரினவாதிகளும் விடும் அறிக்கையை பார்த்தால் அவர்கள் தங்களது சிங்கள இனம்சார்ந்த நலன் சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர்.

அவர்களது தேர்தல் அறிக்கைகளில் தமிழர்களுக்கு எந்த விதமான தீர்வு வழங்கப்படும் என்ற என்ற ஒரு அம்சமே இல்லை, 100 நாட்களுக்கு பின் என்ன செய்வோம் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சிங்கள் கடும்போக்கு அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் 100 நாட்களுக்கு பின் இவர்கள் தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவார்களா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்ட போது அவர் மிக குறைவான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் அவருக்கும் பல தரப்பு விமர்சனங்களும் வந்தது.

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேத்தலில் போட்டியிடும் போது தமிழ் பேசும் தலைமைகள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஆதரவு அளித்தார்களா!

தான் தனது இனத்துக்கு எதோ ஒரு நன்மை கிடைக்க வேண்டும் என்ற தூர நோக்குடன் அவர் செயற்பட்டதை விமர்சனம் செய்தார்களே தவிர பாரிய அளவில் தமிழ் பேசும் தலைமைகள் அவருக்கு ஆதரவை வழங்கவில்லை.

யுத்தத்தை நடத்த சொன்னவனுக்கும் யுத்தத்தை நடத்தியவனுக்கும் இடையில் தனிநபராக தனது சுய நம்பிக்கையை மட்டுமே வைத்து பொது வேட்பாளராக போட்டி இட்டாரே தவிர எந்தவிதமான தமிழ் தலைமைகளும் அவருக்கு ஆதரவினை வழங்கவில்லை.

மக்கள் ஒன்று சேர்கின்றோமோ இல்லையோ தற்போதைய சூழலில் தமிழ் தலைமைகளை ஒன்று சேர்க்க வேண்டிய பொறுப்பு தற்போது சாதாரண மக்களுக்கு உள்ளது.

மனசாட்சி உள்ள ஒருவராவது சொல்லட்டும் தமிழ் மொழி பேசுகின்ற தலைமைகள் ஒரு குடையின் கீழ் பணியாற்றுகின்றோம் என்று இல்லை அதை யாராலும் சொல்ல முடியாது.

இன்றைய கால கட்டத்தில் தமிழ் பேசுகின்ற தமிழ் தலைமைகள் ஒற்றுமை காக்க வேண்டும், இன்று இவர்கள் சொல்லலாம் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம் என்று, ஆனால் அது வெறும் வாய் பேச்சு மட்டுந்தான்.

இந்த உண்மையான கருத்தை நான் முன்வைப்பதன் மூலம் என்னை துரோகி என்றோ அல்லது தமிழர்களை பிளவுபடுத்துகின்றவன் என்றோ விமர்சிக்கலாம், ஆனால் இவர்களின் உண்மையான நிலை இது என்பது மக்கள் உணர வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் தமிழ் மக்களே தமிழ் தலைமைகளுக்கு துரத்தி அடிக்கின்றமை நாம் அனைவரும் இணையங்கள் ஊடகங்களில் பார்த்தோம், தமிழர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் என்றால் ஏன் சம்பூர் மக்கள் தமிழ் தலைமைக்கு வாகனத்தில் இருந்து இறங்க விடாமல் தாக்க வேண்டும்.

சிந்தியுங்கள் தமிழ் பேசும் தலைமைகளே! நீங்கள் மக்கள் பிரதிநிதிகள் உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தது உங்களை பாதுகாப்பதறை்கு அல்ல, மக்களையும் கொஞ்சம் பாருங்கள்.

நீங்கள் மக்கள் சேவகன் என்றால் உங்களுடைய மக்கள் ஒரு நேரம் சாப்பாடுக்கு வழியில்லாமல் தூக்கு போடும் அளவுக்கு வரமாட்டார்கள். நீங்கள் மக்களுக்கு செய்த சேவைகள் தற்போது மக்களாகவே வெளிக்கொண்டு வருகின்றனர்.

அன்பான ஊடக நண்பர்களே நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் இனிமேலாவது எமது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

எமது எழுத்தாயுத்தை யாராலும் அடக்க முடியாது, இனி வரும் காலங்களில் இவர்களின் இந்த தூரநோக்கு தன்மைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு எம்மிடமே உள்ளது.

தமிழ் தலைமைகள் வெளிநாட்டு பயணம் வெற்று பேச்சு என்பதில் அவர்களுக்கு மக்கள் நலன்சார்ந்த எந்த விதமான நடவடிக்கைகளும் எடுப்பதற்கு தற்போது நேரம் இல்லை, ஆகவே எமது பாமர மக்களின் நலன் சார்ந்த விடயங்களை உணர்வுள்ள ஊடகவியலாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

எஸ் கே

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments