இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் கடந்த 28-ந் தேதி காலை புறப்பட்டுச் சென்றது. அதில் விமான ஊழியர்கள் 7 பேரும், 155 பயணிகளும் இருந்தனர்.
இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 149 பேரும், தென்கொரியர்கள் 3 பேரும், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒரு பயணியும் இருந்தனர். இவர்களில் 17 பேர் சிறுவர்-சிறுமிகள். இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் யாரும் இதில் பயணம் செய்யவில்லை.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. தொடர்ந்து விமானம் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் அந்த விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
ஏர் ஏசியா விமானம் மாயமாய் மறைந்த தென் கிழக்கு ஜாவா கடல் பகுதியில் 10 ஆயிரம் சதுர நாட்டிகல் மைல் தூரத்தை 7 பகுதிகளாக பிரித்து தேடும் முயற்சியில், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஏர் ஆசியாவின் மற்றொரு விமானம் விபத்தில் இருந்து தப்பி உள்ளது.அத்ன விவரம் வருமாறு:-
பிலிப்பைன் நாட்டின் மாணீலாவில் இருந்து ஏர் ஆசியா வுக்கு சொந்தமான விமானம் ஆர்பி-சி8972 159 பயணிகளுடன் மத்திய பிலிப்பைன்சின் கலிப்போ தீவுக்கு புறபட்டது விமான நிலையத்தில் ஏர் ஆசியாவுக்கு கலிபோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையை விட்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியது. இதனால் ஓடுபாதையை தாண்டி புல்வெளியில் பாய்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். ஆனால், விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனடியாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வழி வழியாக பத்திரமாக வெளியேற்றபட்டனர். அதில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்டவில்லை.பயணிகள் அனைவரும் ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.


0 Comments