1
பத்து வருட நறுக்குகளை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்!
இன்னும் அவை
பழசாகவில்லை முழுசாக!..
2
நீர்!.. அது
குடித்திருக்கிறது
உயிர்களையும்!.. உடமைகளையும்!
கனவுகளையும்!.. நினைவுகளையும்!..
3
கரையோரக் கிராமங்களின்
கட்டிடங்களின் எழும்புக்கூடுகள்
இன்றும் தலைசாய்த்தே
இருக்கின்றன கடலுக்கு!..
நிந்தவூர்-முர்சித் (இலக்கியன்)


0 Comments