இலங்கை அரசியல் வரலாற்றில் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக போட்டியிடவுள்ள, சமகால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவை சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பளராக போட்டியிடும் மஹிந்த, இன்று காலை 10.30 மணியளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையில் ஒருவர் இரண்டு தடவையே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சட்டம் 18ம் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டு இரண்டு முறைக்கு மேலும் பதவியில் இருக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிகழ்வில் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் பங்கேற்றிருந்தார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments