Subscribe Us

header ads

யெமனில் படகு கவிழ்ந்து விபத்து: ஆபிரிக்க அகதிகள் 70 பேர் பலி

யெமனில் படகு கவிழ்ந்து விபத்து: ஆபிரிக்க அகதிகள் 70 பேர் பலி
ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் 70 பேர், படகில் புலம்பெயர்ந்து சென்ற போது யெமன் நாட்டில் படகு விபத்துக்குள்ளானது. இதில் அப்படகில் பயணம் செய்த அனைவரும் பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்களை ஏற்றி வந்த படகு யெமன் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது சூறாவளி காற்று மற்றும் அலைகளின் கடும் சீற்றம் காரணமாக திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற அனைவரும் பலியானார்கள். ஆண்டுதோறும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் யெமன் நாட்டுக்கு புலம்பெயர்ந்து செல்வது தொடர்கதையாகி வருவதாக அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் அகதிகளாக வந்தவர்களில் 200 பேர் இது வரை கடலில் மூழ்கி இறந்துள்ளதாக ஐ.நா. சபையின் புள்ளி விவரம் கூறியுள்ளது. இது 2011, 2012 மற்றும் 2013 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் உயிரிழந்தவர்களின் கூட்டுத்தொகையை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments