(க.கிஷாந்தன்)
மனித அபிவிருத்தி, மனித உரிமைக்கான ஆணைக்குழுவின் செயலகத்தினால் இன்று காலை 10 மணியளவில் ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் வீதி நாடகம் ஒன்றையும் அதன் பின் பஸ் தரிப்பிடத்திலிருந்து ஹட்டன் கத்தோலிக்க ஆலயம் வரை பேரணியும் நடைபெற்றது.
இதில் மலையக பெருந்தோட்ட மக்களும், நகரவாசிகளும் கலந்து கொண்டனர். இவ் பேரணியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு செல்லும் தாய்மார்களினால்
பாதிக்கப்படும் சிறுவர்களின் எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி நிலை, குடும்ப நிலை, எதிர்கால சமுதாயத்தின் நிலை என்பன ஏற்பாடு குழுவினால் விழிப்புணர்வு உரையும்,
அதற்கான பதாதைகளும் காட்சி படுத்தப்பட்டதுடன் “இனி யாரும் வெளிநாடு போக வேண்டாம்” என்ற கருத்தை கொண்ட துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இதில் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றை பொகவந்தலாவ மொரா தோட்ட சிறுவர்களால் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments