உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சொயிப் மாலிக், கம்ரான் அக்மல், சயீத் அஜ்மல் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
சந்தேகப் பந்துவீச்சு காரணமாக, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்ட சயீத் அஜ்மல், கடந்த கால போட்டிகளில் களமிறங்காத விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல், சோயிப் மாலிக் ஆகியோரது பெயர்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் கான் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அணி விபரம்: மிஸ்பா உல் ஹக் (அணித் தலைவர்), முகமது ஹஃபீஸ், அஹமது ஷேஸாத், நஸீர் ஜாம்ஷெட், சர்ஜீல் கான், சமி அஸ்லாம், யூனிஸ் கான், ஆஸாத் சஃபிக், அஸார் அலி, சோயிப் மக்சூத், ஃபவத் ஆலம், ஹாரிஸ் சோஹைல், சோயிப் மாலிக், உமர் அக்மல், முகமது இர்ஃபான், வஹாப் ரியாஸ், ஜுனைத் கான், உமர் குல், இஷான் அடில், முகமது தல்ஹா, சயீத் அஜ்மல், ஜுல்ஃபிகர் பாபர், ரஸா ஹசன், யசிர் ஷா, ஷாகித் அஃப்ரிடி, அன்வர் அலி, பிலாவல் பட்டி, சோஹைல் தன்வீர், சர்ஃப்ராஸ் அஹமது, கம்ரான் அக்மல்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments