நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிக்கும் வீதத்தை அதிகப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நடவடிக்கைகளை புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் மேற்கொண்டு வருகின்றது.
இந் நடவடிக்கைளில் ஒன்றாக வீட்டுக்கு வீடு விழிப்புணர்வு நோட்டிஸ், 'வாக்குப் பலம்' <வெளியீடு 2> விநியோகம் 2015 ஜனவரி 02 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் புத்தளம் நகரின் பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இக் கையேடு விநியோகத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், இன்று மாலை 4.00 மணிக்கு பெரியபள்ளிவாசலுக்கு வருகைத் தருமாறு அழைக்கின்றோம்.
மேலும், இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கு வாக்காளர் அட்டை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல் வழங்கப்படும். அதேநேரம், தேசிய ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களை படம்பிடித்து கிராம சேவகர் மூலம் தேசிய ஆள் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.
இவ்வண்ணம்
தலைவர்
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம்
-Hisham hussain-
-Hisham hussain-


0 Comments