ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது பதவியை இராஜனாமா செய்துள்ளதாகவும், இதற்கான கடிதத்தை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கட்சியை விட்டும் விலகி, அரசாங்கத்துடன் இணைவாரா என்ற தீர்மானம் இதுவரை தெரிவிக்கப்படவில்லையெனவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும் இவருடைய இராஜனாமாக் கடிதத்தை எதிர்க் கட்சித் தலைவர் இதுவரை பொறுப்பேற்கவில்லையெனவும், தற்பொழுது சிரிக்கொத்தவில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாகவும் செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments