மு.கா ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கிறது? என்பதனை
மக்களுக்கு வெளிப்படுத்துவதில் வேண்டும்
என்றால் கால தாமதம் செய்திருக்கலாம்.ஆனால்,எந்த நேரத்தில் எம் சமூகத்திற்கு நன்மை
பயக்கக் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டுமோ அந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க
அன்று தொடக்கம் இன்று வரை எதற்கும் சோரம்
போனதுமில்லை,தயங்கியதுமில்லை.
இதனை மீண்டும் ஒரு முறை இவ் ஜானாதிபதித் தேர்தல்
ஆதரவு விடயத்திலும் மு.கா தெளிவாக நிரூபித்துக் காட்டியுள்ளது.ஒரு கட்சி திடீர் என
உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு முடிவுகளை எடுத்து விட முடியாது.சாதக பாதகங்களை
சிந்தித்து,முடிவால் ஏற்படப்போகும் விளைவுகளை எதிர் கொள்ளும் வழி முறைகளையும்
சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்.தற்போது,நிதானமாக
சிந்தித்து மக்கள் முழு மனதுடன் பொருந்திக் கொள்ளும் முடிவை வெளிப்படுத்தி
உள்ளது.அல்-ஹம்துலில்லாஹ்.
மு.கா இனது கால தாமதத்தினை நல்லதொரு
சந்தர்ப்பமாய்ப் பயன்படுத்தி மு.கா போராளிகளை தங்கள் வசப்படுத்தவும்,தலைமையை வலுவிழக்கச் செய்யவும்,மு.கா
கட்சியை நலிவடையச் செய்யவும் சில கறையான்கள்
முயன்றனர்.இப்போது அவர்கள் எங்கே?மு.கா அரசோடு ஒட்டித் தான் இருக்கும் என
சவால் விட்டவர்கள் எங்கே?
மற்றவர்களைப் போன்று பதவி பறி போய் விடும்
என்பதற்காகவோ,வேறு சில சிறு பிள்ளைத் தனமான காரணங்களுக்காகவோ மு.கா அரச ஆதரவை
விலக்கவில்லை.முற்று முழுதாக சமூகத்தை மையப்படுத்தி பல சவால்களை எதிர் கொண்டே இம்
முடிவை எடுத்துள்ளது என்பதனை இவ் இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.மு.கா
தலைமையினதும்,கட்சியினதும் கரங்களைப் பலப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி
செய்வானாக.
மு.கா இனை அழிக்க கங்கனம் கட்டி அலையும் சில
புல்லுருவிகளை எதிர் கொள்ள போராளிகளே புறப்படுங்கள்..!


0 Comments