பூனைகளின்
வால்களைப் பிடித்து சிங்கத்தின்
கோட்டைக்குள் நுழைந்த மைத்திரி இன்றிலிருந்து சிங்கத்தின் வாலைப் பிடித்துக்
கொண்டு நுழையப் போகிறார்..!!
மு.கா முடிவின் கால தாமதத்தை தங்களுக்குச்
சார்பாய் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் சற்றேனும் பிரபலமில்லாது உறங்கிக்
கிடந்த பல அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் நீரோட்டப் பாதைக்கு உயிர் கொடுத்து
மக்களிடையே தங்கள் பிரபலத்தை அதிகரித்துக் கொண்டார்கள்.NFGG என்ற
வார்த்தையை அறியாத மக்கள் கூட அறிந்து கொண்டார்கள்.மு.கா இனது இக் கால தாமதம்
மு.கா வரலாற்றில் பதிவிட வேண்டிய ஓர் வரலாற்றுத் தவறாகும்.எனினும்,மு.கா மைத்திரியின்
ஆதரவினால் இவர்கள் காற்றில் அள்ளுண்டு போன சருகுகலாட்டம் கரையொதுங்கப்போகிறார்கள்.
எது எவ்வாறு இருப்பினும் மு.கா ஒரு போது
மக்களுக்கு எதிரான தீர்மானத்தினை மேற்கொண்டதில்லை.சில அரசியல் காய்
நகர்த்தலுக்காவே சில அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்
இருந்தது.இது சில நேரம் வெளிப்பார்வையில்
மக்களுக்கு எதிரான முடிவுகள் போன்று தோன்றலாம்.உள் ஆராந்து உண்மை நிலையைப்
பார்த்தால் அது தான் சிறந்த முடிவை அமைந்திருக்கும்.அழுத்கமைப் பிரச்சனையைத்
முடிவிற்கு கொண்டு வர மு.கா அரசுடன் இருந்து கொண்டு செய்த வேலைகளே மிகப் பெரிய
பங்கு.இதை எல்லாம் விமர்சனவாளர்கள் எங்கே
ஆரியப் போகிறார்கள்?
இன்று வரை எத் தேர்தலிலும் மு.கா அரசிற்கு தனது
நேரடி ஆதரவை வழங்கவில்லை.ஏன்? பல தேர்தலில் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க யை விட
த.தே.கூ இற்கு அடுத்த படியாக அரசிற்கு
தலையிடியாக இருந்த கட்சி மு.கா தான்.த.தே.கூ இனால் வடக்கில் மாத்திரமே அரசிற்கு
அழுத்தம் கொடுக்க முடிந்தது.ஆனால்,மு.கா இனால் நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற
தேர்தல்களில் அழுத்தம் வழங்கப்பட்டது.
இக் கட்சியினைப் பார்த்து அரசிற்கு சோரம்
போனவர்கள் என விமர்சித்தோர் இப்போது எங்கே?இத் தலைமையினை விமர்சித்தோர் எங்கே?
லேட்டா வருகிறாரா என்பது முக்கியம் அல்ல
லேட்டஸ்டா வருகிறாரா என்பதே முக்கியம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.


0 Comments