Subscribe Us

header ads

சுனாமி நினைவு தினம்: ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டையில்


சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இம்முறை சுனாமி நினைவு தினம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை ருஹூனு மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 2004, டிசம்பர் 26ஆம் திகதியன்று, ஏற்பட்ட சுனாமி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த கோரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. பத்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், அதன் சுவடுகள் இன்னும் நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments