புத்திஜீவிகளிடமா அல்லது குண்டர் கூட்டத்திடமா நாடடை ஒப்படைப்பது என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிவை மையமாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளின் இலக்காக அமைந்துள்ளது.
புத்திஜீவிகளுக்கு நாட்டை ஆட்சி செய்ய அனுமதிப்பதா அல்லது குண்டர்களிடம் ஆட்சி செய்ய ஒப்படைப்பதா?
இன்று சிறிகொத்த மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கம் இலவச கல்வியை இல்லாமல் செய்ய முயற்சித்து வருகின்றது.
மொத்த தேசிய உற்பத்தியில் அரசாங்கம் 1.6 வீதத்தையே கல்விக்காக செலவிடுகின்றது.
பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்றவற்றின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது.
அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்பின்றி அதிபர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது.
கல்விச் சேவை முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இளைஞர் யுவதிகளிடமும் ஏதாவது ஒர் திறமை காணப்படுகின்றது அதனை இனம் கண்டு அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எல்லாப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கும் கல்வியை சிறந்த முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமேன ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டேயில் நடைபெற்ற கட்சியின் தொழிற்சங்க மாநாடு ஒன்றில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


0 Comments