இலங்கையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வன்னி மாவட்டத்தின் கள நிலவரங்களை அமெரிக்கா ஆராய்ந்துள்ளதாக உள்நாட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி சந்தீப் குரோஸ் கடந்த 23ம் திகதியன்று புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரவிகரன் உட்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கனகரட்னம் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதனை தவிர குரொஸ் டிசம்பர் 22ம் திகதியன்று திருகோணமலையில் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணியையும் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க தூதரக முதல் செயலாளர் மைக்கல் எர்வின்ஹான்டும் உடனிருந்துள்ளார்.
இதன்போது ஆளும் மற்றும் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சீன உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.


0 Comments