அன்பையும் பொறுமையையும் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பயங்கரவாத அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்டுள்ளன.
யேசு பாலன் பிறந்த இந்நாளில் அன்பு மற்றும் பொறுமை பற்றிய செய்தி உலகிற்கு உணர்த்தப்படுகின்றது.
இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள் யேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றனர்.
யேசு கிறிஸ்துவின் பிறப்பு மனித குலத்தின் விமோசனத்திற்கு வழியமைக்கும் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள்.
அனைத்து உயிரினங்களுக்கும் அன்பைக் காட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments