அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் மருத்துவர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டில் மருத்துவராக உள்ளவர் மானுவேல் அல்வராடோ (Manuel Alvarado Age-60). இவர் கடந்த அக்டோபர் மாதம் 22ம் திகதி பகோடா (Bogota) நகருக்குச் செல்லும் விமானத்திற்காக அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமானநிலையத்தில் (Miami International Airport) காத்திருந்தார்.
இந்நிலையில் இவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்தபோது, தான் கொமடி செய்வதாக நினைத்து சி-4 (C-4) எனப்படும் வெடிபொருட்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவரின் உடமைகளை சோதனை செய்த அதிகாரிகள், அவர் இருந்த பகுதியில் அனைவரையும் வெளியேற்றினர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருக்கும் மக்களும் பீதியில் உறைந்துள்ளனர்.
ஆனால் சோதனைக்கு பிறகு மருத்துவர் கூறியது பொய் என உறுதியானது. எனினும் வெடிகுண்டு புரளியை பரப்பி, வீண் பரபரப்பை உண்டாக்கியதற்காக இவருக்கு 90,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments