புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் 2184 பொதிகள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களே அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலிருந்து நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்கள் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments