Subscribe Us

header ads

உலகக் கிண்ணம்: 30 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு


2015 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இலங்கை  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச அணியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க மற்றும் அறிமுக வீரராக இடது கை பந்து வீச்சாளர் லகஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச அணி வீரர்கள் விவரம் வருமாறு:
ஏஞ்சலோ மெத்தியூஸ்(அணித் தலைவர்), திலகரட்ன டில்சான், லஹிரு திரிமன, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, குசேல் ஜனித் பெரேரா, உப்புல் தரங்க, திமுது கருணாரத்ன, தினேஸ் சந்திமால், டில்ருவன் பெரேரா, சீக்குககே பிரசன்ன, அஜந்த மெண்டிஸ், சச்சித்திர சேனாநாயக்க, தரிந்து கௌசல், ஜீவன் மெண்டிஸ்,  ரமித் ரம்புக்வெல, சுரங்க லக்மால், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, தம்மிக்க பிரசாட், சமிந்த ஹேரங்க, திசர பெரேரா, பர்விஸ் மஹ்ரூப், நுவான் பிரதீப், லஹிரு கமகே, லகஷன் சந்தகன், மேலதிக வீரர்களாக டில்கார பெர்ணன்டோ, சாமர கப்புகெதர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

/JAH



கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments