Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தல் வாரத்தில் SMS சேவைகளை முடக்க முயற்சி – மங்கள

 
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள வாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்து SMS சேவைகளையும் முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியின் சிரிகொத தலைமையகத்தில் நடைபெற்று வரும் ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்:
அண்மையில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் கலந்துகொண்ட முதலாவது தொலைகாட்சி நிகழ்ச்சியையும் கேபள் வலையமைப்பில் இயங்கும் சேவைகளின் முடக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதேபோன்று தேர்தல் நடைபெறும் வாரத்தில் அதாவது ஜனவரி 2ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இலங்கையில் இயங்கும் அனைத்து SMS குறுந்தகவல் சேவைகளையும் தொழிநுட்ப கோளாறு காரணம் காட்டி முடக்குவதற்கான முயற்சிகளை பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட உபகரணம் ஒன்று பயன்படுத்தப்படவுள்ளதாகவும். இது தொடர்பாக இலங்கையில் இயங்கும் அனைத்து கையடக்க தொலைபேசி நிறுவனங்களினதும் பிரதானிகளுடன் அரச பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார். 
 

Post a Comment

0 Comments